2016-02-11 15:48:00

மனித உரிமை மீறல்கள் அதிகம் இடம் பெறும் நாடு மெக்சிகோ


பிப்.11,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மெக்சிகோ நாட்டிற்கு வருகை தரும்போது, அமெரிக்கக் கண்டத்திலேயே மிக அதிக அளவில் மனித உரிமை மீறல்கள் அங்கு இடம் பெறும் சூழலைச் சந்திக்கவிருக்கிறார் என்று Amnesty International அமைப்பின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

பிப்ரவரி 12ம் தேதி முதல், 18ம் தேதி முடிய திருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும் மெக்சிகோ திருத்தூதுப் பயணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, Amnesty International அமெரிக்கக் கிளையின் இயக்குனர், Erika Guevara-Rosas அவர்கள் இவ்வாறு கூறினார்.

மனிதக் கடத்தல், காணாமற்போதல், கொலைகள் ஆகிய குற்றங்களில் சிக்கித் தவிக்கும் மெக்சிகோ நாட்டிற்கு திருத்தந்தை வருவது, ஒரு பெரும் சவாலான பயணம் என்று Guevara-Rosas அவர்கள் எடுத்துரைத்தார்.

தனது திருத்தூதுப் பயணத்தின்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மெக்சிகோ அரசுத் தலைவர் Peña Nieto உடன் மேற்கொள்ளும் சந்திப்பில், அந்நாட்டின் பிரச்சனைகள் பேசப்படும் என்று தான் எதிர்ப்பார்ப்பதாக, Guevara-Rosas அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.