2016-02-10 15:28:00

திருத்தந்தையைச் சந்தித்த ஈராக் நாட்டுப் பிரதமர்


பிப்.10,2016. பிப்ரவரி 10, இப்புதனன்று காலை, தன் புதன் பொது மறைக்கல்விக்கு முன்னதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக் நாட்டுப் பிரதமர், Haydar al-Abadi அவர்களை திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.

இரு நாடுகளுக்குமிடையே நிலவும் நல்லுறவுகள், ஈராக்கில் வாழும் கிறிஸ்தவர்கள் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோரின் நிலை, அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய உரிமைகள் ஆகிய கருத்துக்கள் இச்சந்திப்பில் பேசப்பட்டன என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியது.

மேலும், ஈராக்கிலும் அதன் சுற்றுப்பகுதியிலும் சகிப்புத் தன்மை, அமைதி, சமுதாய நீதி ஆகியவை நிலைநாட்டப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் இச்சந்திப்பில் இடம்பெற்றதென சொல்லப்படுகிறது.

ஈராக் பிரதமர் Haydar al-Abadi அவர்கள், திருத்தந்தையைச் சந்தித்தப்பின், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், திருப்பீட வெளியுறவுத் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்களையும் சந்தித்துப் பேசினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.