2016-02-08 17:11:00

தேவநிந்தனை சட்டத்தில் மாற்றம் – பாகிஸ்தான் ஆயர் நம்பிக்கை


பிப்.08.2015. பாகிஸ்தானில் அண்மையில் இடம்பெற்றுவரும் நல்ல மாற்றங்களைக் காணும்போது, அந்நாட்டின் தேவ நிந்தனைச் சட்டத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றம் உருவாகும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதென்று பாகிஸ்தான் கத்தோலிக்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளதாக UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

பாகிஸ்தானின் தேவ நிந்தனைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, அதன் அடிப்படையில், பல கிறிஸ்தவர்கள் சிறைத் தண்டனை பெற்றுள்ள நிலையில், அச்சட்டத்தைத் திருத்தி அமைக்க, சில இஸ்லாமியத் தலைவர்களே முன்வந்திருப்பது, நல்ல நம்பிக்கையைத் தருவதாக உள்ளது என்று, லாகூர் பேராயர் செபாஸ்டின் பிரான்சிஸ் ஷா அவர்கள் கூறினார்.

பாகிஸ்தானின் இஸ்லாமிய கருத்தியல் அவையின் தலைவர், முகம்மத் கான் ஷெரானி அவர்கள், தேவ நிந்தனைச் சட்டத்தைத் திருத்தி அமைக்க முன்வந்திருப்பது, இச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதுடன், அப்பாவி மக்களின் வாழ்வைச் சிதைப்பதையும் தடைசெய்யும் என்றார், பேராயர் பிரான்சிஸ் ஷா. 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.