2016-01-23 15:39:00

குடிபெயர்ந்தவர் பிரச்சனைக்கு WCC, ஐ.நா. ஒன்றிணைந்த முயற்சி


சன.23,2016. சுவிட்சர்லாந்து நாட்டின் தாவோஸ் நகரில் இச்சனிக்கிழமையன்று நிறைவடைந்த உலக பொருளாதார மாநாடு, பல்வேறு துறைகளுக்கு இடையே தொழில்நுட்பமும், ஒத்துழைப்பும் பொது நலனுக்கு எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பது பற்றி விவாதிப்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது என்று WCC உலக கிறிஸ்தவ மன்றத் தலைவர் Olav Fykse Tveit அவர்கள் கூறினார்.

உலக பொருளாதார மாநாடு பற்றி, வத்திக்கான் வானொலியிடம் பேசிய, இம்மாநாட்டில் கலந்துகொண்ட Tveit அவர்கள், இந்த மாநாடு, நான்காவது தொழிற்சாலை அல்லது தொழில்நுட்பப் புரட்சி பற்றி கவனம் செலுத்தியது என்று கூறினார்.

சமத்துவமற்ற நிலை, சமூகத்தின் எல்லா நிலைகளையும் பாதித்துள்ளது, இது வன்முறைக்கும், புலம்பெயர்ந்தவர் பிரச்சனைக்கும் இட்டுச் சென்றுள்ளது, பல நாடுகளில் பல கிறிஸ்தவ சபைகள் புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவி வருகின்றன என்று கூறினார்.

இதற்கிடையே, புலம்பெயர்ந்தவர் பிரச்சனை, ஐரோப்பாவுக்கு ஒரு சவாலாக உள்ளவேளை, கிரேக்க மற்றும் துருக்கி கடற்கரைக் காவலர்கள், 20 சிறார் உட்பட, 40க்கும் மேற்பட்ட உடல்களை இவ்வெள்ளியன்று மீட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.