2016-01-23 15:41:00

எல் நீனோ ஆறு கோடி மக்களின் வாழ்வுக்குப் பெரும் அச்சுறுத்தல்


சன.23,2016. எல் நீனோ(El Niño) காலநிலை, வளரும் நாடுகளில் குறைந்தது ஆறு கோடி மக்களின் வாழ்வுக்குப் பெரும் அச்சுறுத்தலை முன்வைத்துள்ளது என்று, ஐ.நா.வின் WHO நிறுவனமும், அந்நிறுவனத்தோடு தொடர்புடைய பிற நிறுவனங்களும் கூறுகின்றன.

எல் நீனோ காலநிலையால், இவ்வாண்டில் மக்களின் நலவாழ்வில் அவசரகால நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்றுரைக்கும் இந்நிறுவனங்கள், எல் நீனோ காலநிலை மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலை வெப்பமாக்குவதால், இது, உலகின் பல பகுதிகளின் மழைப்பொழிவையும், வெப்பநிலையையும் பாதிக்கின்றது என்று எச்சரிக்கின்றன.

குறிப்பாக, இயற்கைப் பேரிடர்களால் எளிதாகத் தாக்கப்படக்கூடிய ஆப்ரிக்கா, ஆசிய-பசிபிக் மற்றும் இலத்தீன் அமெரிக்க வெப்பமண்டலப் பகுதிகளில் எல் நீனோ பாதிப்பு அதிகம் உணரப்படும் என்றும் இந்நிறுவனங்கள் இவ்வெள்ளியன்று கூறின. 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.