2016-01-20 14:36:00

இது இரக்கத்தின் காலம்– இறையரசை உரிமையாக்கும் ஏழையரின் உள்ளம்


ஒருமுறை காட்டில் விறகு பொறுக்கிக்கொண்டு தனியாக நடந்து வந்து கொண்டிருந்த வேலம்மாவிடம், ஒரு பெரும்பணக்காரர் வழி தெரியாமல், பக்கத்து ஊருக்கு வழிகாட்டுமாறு கேட்டார். வேலம்மாவும் அவரை அழைத்துக்கொண்டு வழி நடந்தார். போகிற வழியில் அந்த பணக்காரரைப் பற்றிய விவரங்களை அவரே கூறக்கேட்ட வேலம்மாள், 'இவ்வாளவு செல்வங்களைச் சேமித்து வைத்திருக்கும் நீங்கள், அதனை ஏழைகளுக்கும் பகிர்ந்து கொடுத்தால் என்ன' என்று கேட்டார். சிரித்துக்கொண்டே பதிலளித்த அந்தப் பணக்காரர், 'என்னிடம் இருப்பதெல்லாம், நான் சம்பாதித்தவை அல்ல. என் தந்தை வழியாக எனக்கு வந்தவை. எனனால் சம்பாதிக்கப்படாத அந்தச் சொத்து எனக்கு உரிமையானது அல்ல என்பது எனக்குத் தெரியும். அவைகளை நான் தொடுவதில்லை. என் பணியின் மூலம் கிடைக்கும் ஊதியத்தையே நான் செலவழிக்கிறேன்' என்றார். 'அப்படியானால், இந்தப் பகுதி முழுவதுமே உங்களை, பெரும் செல்வந்தர் என்று தூக்கிக் கொண்டாடுகின்றதே' என்று கேட்டார் வேலம்மாள். ‘எவ்வாறு என் மூதாதையரின் சொத்து என் வழியாக கடந்து போகப் போகிறதோ, அவ்வாறே இந்தப் பெயரும் கடந்து போகும் என்பது எனக்குத் தெரியும். நிறைய நிலபுலன்கள் இருக்கின்றன. அதில் வேலை செய்பவர்களே அவைகளை அனுபவிக்கிறார்கள். இருப்பதை நினைத்து நான் நிறைவடைகிறேன். இல்லாததை நினைத்து நீங்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறீர்கள்' என்றார் அந்தப் பணக்காரர். அவர் சொல்வதன் அர்த்தம் புரியாமல் குழம்பினார் வேலம்மாள்.

ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.