2016-01-19 15:40:00

2015ல் 120 கோடி சுற்றுலாப் பயணிகள்


சன.19,2016. உலக அளவில் 2015ம் ஆண்டில் சுற்றுலாக்கள் 4.4 விழுக்காடு உயர்ந்துள்ளது என்றும், பன்னாட்டு போக்குவரத்து நிலையங்களில் ஓர் இரவில் மட்டும் ஒரு இலட்சத்து 18 ஆயிரத்து 400 கோடிப் பயணிகள் சென்று இறங்கினர் என்றும் ஐ.நா.வின் உலக சுற்றுலா நிறுவனம் (UNWTO) அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டின் இவ்வெண்ணிக்கை, 2014ம் ஆண்டைவிட 5 கோடிக்கும் அதிகம் என்று கூறும் உலக சுற்றுலா நிறுவனம், 2015ம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, உலகின் பல பாகங்களில் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புக்களுக்கும் உதவியுள்ளது என்றும் கூறியுள்ளது.

2016ம் ஆண்டில், ஆசியா, பசிபிக் மற்றும் அமெரிக்காவில் நான்கு முதல் ஐந்து விழுக்காடும், ஐரோப்பாவில் 3.5 முதல் 4.5 விழுக்காடு வரைக்கும், ஆப்ரிக்காவிலும், மத்திய கிழக்கிலும் இரண்டு முதல் ஐந்து  விழுக்காடும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் உலக சுற்றுலா நிறுவனம் கூறியுள்ளது.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.