2016-01-12 16:04:00

போர்ப் பகுதிகளில் 2 கோடி சிறார் பள்ளிக்குச் செல்லவில்லை


சன.12,2016. போர் இடம்பெறும் பகுதிகளில் பள்ளிக்குச் செல்லாத சிறார், ஆயுதம் ஏந்திய குழுக்களில் சேர்க்கப்படும் ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என்று எச்சரித்துள்ளது ஐ.நா.வின் யூனிசெப் குழந்தை நல நிறுவனம்.

போர் இடம்பெறும் பகுதிகளில் இரண்டு கோடிக்கு மேற்பட்ட சிறார் பள்ளிக்குச் செல்லவில்லை என்றுரைத்துள்ள யூனிசெப் நிறுவனத்தின் கல்வி இயக்குனர் Jo Bourne அவர்கள், அவசரகாலச் சூழல்களில் வாழும் சிறார்க்கு கல்வி வழங்கப்படவில்லையெனில், ஒரு தலைமுறைச் சிறார் எவ்விதத் திறமையுமின்றி வளர்வார்கள் என்று கூறியுள்ளார்.

தங்களின் நாடுகளுக்கும், பொருளாதாரத்திற்கும் வழங்குவதற்குத் தேவையான திறமைகள் இன்றி இச்சிறார் வளர்வார்கள் என்றும், சண்டை முடிந்த பிறகே பள்ளிகள் தொடங்கப்படும் என்றும் கூறினார் Bourne.

தென் சூடானில் ஆரம்ப மற்றும் நடுத்தரப் பள்ளி செல்லும் வயதுடைய 51 விழுக்காட்டுச் சிறாரும், நைஜரில் 47 விழுக்காட்டுச் சிறாரும் பள்ளிக்குச் செல்லவில்லை என்று ஐ.நா.கூறுகிறது.  

ஆதாரம் : IANS /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.