2016-01-02 15:51:00

தென்னாப்ரிக்கா-புதிய அணு சக்தி நிலையங்கள் பொருளாதாரச் சுமை


சன.02,2016. தென்னாப்ரிக்காவில் புதிய அணு சக்தி நிலையங்களை அமைப்பது, நாட்டின் பொருளாதாரத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று சொல்லி, இது குறித்து பொது மக்கள் கருத்து வாக்கெடுப்பு நடத்துவது அவசியம் என்று, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி பணிக்குழு கூறியது.

தற்போது தென்னாப்ரிக்கா, பொருளாதார நெருக்கடியில் உள்ளது என்றும், புதிய அணுசக்தி நிலையங்களுக்கு ஏறக்குறைய பத்தாயிரம் கோடி டாலர் தேவைப்படும் என்பதால், இதற்கு அந்நாடு தாக்குப் பிடிக்காது என்றும் அப்பணிக்குழுத் தலைவரான Kimberley ஆயர் Abel Gabuza அவர்களின் அறிக்கை கூறுகிறது.

தென்னாப்ரிக்காவின் அணு சக்தி நிலையங்களில், மேலும் 9,600 மெகாவாட்ஸ் அணுசக்தி சேர்க்கப்படும் என்று அரசு அறிவித்திருப்பதை முன்னிட்டு ஆயர்கள் அத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தென்னாப்ரிக்க அரசுத்தலைவர் Jacob Zuma நிர்வாகம், அரசின் இத்திட்டங்கள் குறித்து  பொது மக்கள் கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி பணிக்குழு கேட்டுள்ளது.

ஆதாரம் : CNS /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.