2016-01-01 14:07:00

இது இரக்கத்தின் காலம் - பால்குடிக்கும் மகவைத் தாய் மறப்பாளோ?


குழந்தை நடு இரவில் வீறிட்டு அழுகிறது. சட்டென்று அந்தத் தாய் விழித்துக் கொள்கிறார். குழந்தை பிறந்தது முதல், இப்படித்தான் தாயின் தூக்கம் கெடுகிறது. குழந்தையின் அழுகுரலை வைத்தே அது எதற்காக அழுகிறது என்பதை தாய் கண்டுபிடித்து விடுகிறார். குழந்தைக்குப் பால் கொடுக்க வேண்டுமா, அதை தாலாட்ட வேண்டுமா, அல்லது வேறெதாவது செய்ய வேண்டுமா என்பதை தாயால் புரிந்துகொள்ள முடிகிறது. குழந்தையின் அழுகைக்கு காரணம் எதுவாக இருந்தாலும், அந்தத் தாய் உடனடியாக அதன் தேவையை கவனிக்கிறார். குழந்தை அழுதால் அழட்டும் என அப்படியே விட்டுவிட தாயின் மனம் இடம் கொடுப்பதில்லை.

பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளை மீது தாய் காட்டும் இரக்கமே, மனிதர் அறிந்த மிக மென்மையான உணர்ச்சிகளுள் ஒன்று. ஆனால், அதைவிட பன்மடங்கு வலிமை வாய்ந்த உணர்ச்சி இருக்கிறது, அதுதான் நம் தந்தையும் தாயுமான கடவுளின் உருக்கமான இரக்கம்.

“பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? பெற்ற தாய் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன்” என ஏசாயா நூலில் இறைவன் கூறுவது இரக்கத்தின் ஆழத்தை வலியுறுத்துகிறது.

பால்குடிக்கும் குழந்தைக்கு உணவூட்டி, சீராட்டி, பாராட்ட ஒரு தாய் மறந்துவிடுவதை கற்பனை செய்து பார்க்க முடியுமா? அதைவிட உயர்ந்த இறை இரக்கத்தை, இறை பராமரிப்பை இந்நாளில் எண்ணிப் பார்ப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.