2015-12-31 15:51:00

திருத்தந்தையின் ஆண்டிறுதி மற்றும் புத்தாண்டு நிகழ்வுகள்


டிச.31,2015. ஆண்டின் இறுதி நாளான இவ்வியாழன் மாலை 5 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், 'Te Deum' என்று வழங்கப்படும் நன்றி வழிபாட்டை முன்னின்று நடத்தியபின், புனித பேதுரு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் குடிலுக்குச் சென்று வணக்கம் செலுத்துகிறார்.

புத்தாண்டின் முதல் நாள் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் இறைவனின் தாயான மரியா பெருவிழா திருப்பலியை ஆற்றி, மறையுரை வழங்குகிறார் திருத்தந்தை.

தற்போது நடைபெற்றுவரும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் ஒரு முக்கிய நிகழ்வாக, சனவரி முதல் நாள் மாலை 5 மணிக்கு, உரோம் நகர், புனித மேரி மேஜர் பசிலிக்காப் பேராலயத்தின் புனிதக் கதவைத் திறந்துவைக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதைத் தொடர்ந்து, பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்துகிறார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.