2015-12-31 16:04:00

திருத்தந்தை:நம்மருகே இரக்கத்துடன் இருக்கும் இறைவனுக்கு நன்றி


டிச.,31,2015. "எப்போதும் நம்மருகே இரக்கத்துடன் இருக்கும் இறைவனுக்கு நன்றி கூறுவோம்" என்ற வார்த்தைகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2015ம் ஆண்டின் இறுதிச் செய்தியாக தன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே, டிசம்பர் 30, இப்புதன் மாலை, ஜெர்மன் நாட்டைச் சார்ந்த 36 இளையோர், முன்னாள் திருத்தந்தை பெனடிக்ட் அவர்களின் முன்னிலையில் கிறிஸ்மஸ் பாடல்களை இசைத்தனர்.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் மூத்த சகோதரர் Georg Ratzinger அவர்கள் இயற்றிய ஒரு பாடலும் இப்பாடல்களில் ஒன்றாக பாடப்பட்டது.

முன்னாள் திருத்தந்தை பெனடிக்ட் அவர்கள் கலந்து கொண்ட இந்த இசை நிகழ்ச்சியில், அவரது மூத்த சகோதரர் Georg அவர்களும், பாப்பிறை இல்ல கண்காணிப்பாளர், Georg Gänswein அவர்களும் கலந்துகொண்டனர்.

இந்த இசை நிகழ்ச்சியின் இறுதியில், முன்னாள் திருத்தந்தை பெனடிக்ட் அவர்கள், பாடகர்களுக்கும் மற்றவர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 

ஆதாரம்: வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.