2015-12-30 16:01:00

2015ம் ஆண்டில் 22 மேய்ப்புப் பணியாளர்கள் கொலை


டிச.30,2015. முடிவடையும் 2015ம் ஆண்டில், உலகின் பல நாடுகளில், மேய்ப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 22 பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று, டிசம்பர் 30, இப்புதனன்று ஃபீதேஸ் (Fides) செய்தி புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்களில் 13 பேர் அருள் பணியாளர்கள், 4 பேர் துறவியர் 5 பேர் பொது நிலையினர் என்று தெரிய வந்துள்ளது.

அமெரிக்கக் கண்டத்தில் 8 பேர், ஆசியாவில் 7 பேர், ஆப்ரிக்காவில் 5 பேர், மற்றும் ஐரோப்பாவில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள், பங்குத் தளங்கள், அல்லது, துறவு இல்லங்களில் நடைபெற்ற திருட்டின் காரணமாகக் கொல்லப்பட்டனர் என்றும், ஒரு சிலர், பணியாளர்களிடம் நன்மைகள் பெற்ற மக்களில் ஒரு சிலரால் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் ஃபீதேஸ் செய்தி கூறுகிறது.

2000மாம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு முடிய, நடைபெற்ற கொலைகளில், 5 ஆயர்கள் உட்பட, இதுவரை மெய்ப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 396 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஃபீதேஸ் செய்தி கூறியுள்ளது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.