2015-12-29 14:52:00

உலகின் அமைதிக்கு கிறிஸ்தவர்க்கும், முஸ்லிம்களுக்கும் அழைப்பு


டிச.29,2015. இவ்வாண்டு கிறிஸ்து பிறப்பு விழாவும், மிலாடி நபி பண்டிகையும் அடுத்தடுத்து சிறப்பிக்கப்பட்டது, உலகில் அமைதியைக் கொண்டு வருவதற்கு கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் அழைப்பு விடுப்பதாய் அமைந்துள்ளது என்று நைஜர் நாட்டு ஆயர்கள் கூறியுள்ளனர்.

இறைவாக்கினர் முகமது அவர்களின் பிறப்பு விழாவான மிலாடி நபி பண்டிகை, இவ்வாண்டில், டிசம்பர் 24, கடந்த வியாழனன்று சிறப்பிக்கப்பட்டது குறித்து, தங்களின் கிறிஸ்மஸ் செய்தியில் குறிப்பிட்டுள்ள நைஜர் தலைநகர் Niamey பேராயர் Laurent Lompo, Maradi ஆயர் Ambroise Ouedraogo ஆகிய இருவரும் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அனைத்து விசுவாசிகளுக்கும் மூதாதையரான தந்தை ஆபிரகாமில் கொண்டிருக்கும் பொதுவான விசுவாசத்தின் பெயரில், உலகில் அமைதியைக் கொண்டு வருவதற்கு, இவ்விரு மதத்தவருக்கும் இவ்விழாக்கள் அழைப்பு விடுக்கின்றன என்று, இவ்விரு ஆயர்களும் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள கிறிஸ்மஸ் செய்தி கூறுகிறது.

அன்பு, மன்னிப்பு, ஒருவர் ஒருவரை மதித்தல், அமைதி, தேசிய ஒற்றுமை ஆகியவற்றில் வளர, கிறிஸ்தவர்க்கும், முஸ்லிம்களுக்கும் நைஜர் நாட்டின் விருதுவாக்கு அழைப்பு விடுப்பதாகவும் ஆயர்களின் கிறிஸ்மஸ் செய்தி கூறுகிறது

457 ஆண்டுகளுக்குப் பின்னர், கிறிஸ்து பிறப்பு விழாவும், மிலாடிநபி பண்டிகையும் இந்த 2015ம் ஆண்டில் அடுத்தடுத்து சிறப்பிக்கப்பட்டன.

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.