2015-12-28 16:24:00

Taizé குழும இளையோர்க்கு திருத்தந்தை வாழ்த்து


டிச.28,2015. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், கிறிஸ்தவர்கள், உடல் மற்றும் ஆன்மீகம் சார்ந்த இரக்கப் பணிகளில் ஈடுபடுமாறு பல நாடுகளின் இளையோரிடம் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 

இஸ்பெயினின் வலென்சியா நகரில் டேஜே குழுமத்தின் 38வது ஐரோப்பிய கூட்டத்தில் கலந்துகொள்ளும் ஆயிரக்கணக்கான இளையோர்க்கு அனுப்பிய செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இரக்கம் என்ற தலைப்பு, இளையோர் அனைவரையும் ஒன்றுசேர்த்து, 2016ம் ஆண்டு முழுவதும் தன்னோடு மிக நெருக்கமாக வைத்திருக்கும் என்றும், இரக்கம் என்ற பண்பு வாழ்வின் சமூகத் தளங்களில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இச்செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரில் இஞ்ஞாயிறன்று அனுப்பியுள்ளார்.

திருஅவை, மனித சமுதாயத்திற்காக இருக்கின்றது, கிறிஸ்தவர்கள் இருக்குமிடத்தில் எந்தவொரு மனிதரும் இரக்கத்தின் பாலைவனச்சோலையைக் கண்டுகொள்ள வேண்டும், உங்களின் கிறிஸ்தவச் சமூகங்கள் இவ்வாறுதான் மாற வேண்டுமெனவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.