2015-12-25 13:55:00

கடுகு சிறுத்தாலும்: இருப்பதும் இல்லாததும், உள்ளே இருக்கிறது


சென் துறவி ஒருவர் தனது 60வது வயதில்தான் ஜென் தத்துவங்களைப் படிக்க ஆரம்பித்தார். தனது 80வது வயது வரை படித்தார். பின்னர், தான், 120ம் வயதில் இறக்கும்வரை, மற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்தார். அந்த துறவியிடம் மாணவன் ஒருவன், ‘குருவே, என் மனதில் எதுவுமே இல்லையென்றால் என்ன செய்வது?’ என்றான்.

குரு, ‘அதைத் தூக்கி எறிந்து விடு,’ என்றார்.

மீண்டும் அவன், ‘என்னிடம்தான் எதுவுமே இல்லையே? எப்படித் தூக்கி எறிவது?’ என்றான்.

குரு மீண்டும், ‘சரி, அப்படியானால் நீயே வைத்துக் கொள்’ என்றார்! 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 
All the contents on this site are copyrighted ©.