2015-12-22 15:13:00

மனித கிறிஸ்மஸ் மரம் அமைத்து கேரளா கின்னஸ் சாதனை


டிச.22,2015. மனிதர்களைக் கொண்டு உலகில் மிகப் பெரிய கிறிஸ்மஸ் மரத்தை அமைத்து உலக சாதனையில் இடம்பெற்றுள்ளது கேரளா.

கடந்த ஆண்டில் கொண்டூராஸ் நாட்டில் வைக்கப்பட்ட மிகப் பெரிய மனிதக் கிறிஸ்மஸ் மர சாதனையை இவ்வாண்டு கேரளா முறியடித்துள்ளது.

டிசம்பர் 20, இஞ்ஞாயிறன்று, ஆலப்புழாவின் சென்கனூர் நகராட்சி அரங்கத்தில் ஏறத்தாழ 4,030 பேர் தங்களுக்குரிய ஆடை நிறங்களுடன் கூடி கிறிஸ்மஸ் மரமாக நின்றுள்ளனர். பிற்பகலில் தொடங்கிய இந்நிகழ்வு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

கடந்த ஆண்டில் கொண்டூராஸ் நாட்டில் ஏறத்தாழ 2,945 பேர் கிறிஸ்மஸ் மரமாக நின்றுள்ளனர். 

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.