2015-12-22 15:01:00

சிரியா அகதிகளுக்கு உதவ கானடா இணையதள ஆர்வலர்கள்


டிச.22,2015. கானடா நாட்டிற்குப் புகலிடம் கோரி வரும் சிரியா அகதிகளின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அந்நாட்டு இணையதள ஆர்வலர்கள் ஏறக்குறைய 40,000 டாலர் நிதி திரட்ட முடிவு செய்துள்ளனர்.

கானடாவின் Nova Scotia மாநிலத்தில் உள்ள Halifax நகர இணையதள பயன்பாட்டாளர்கள் சிரியா நாட்டு அகதிகளை அன்புடன் வரவேற்பதுடன் அவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளில் முழுவீச்சில் இறங்கியுள்ளனர்.

இதன் முதற்கட்டமாக, இதே நகரில் வாழும் Val Macdonald என்பவர் சிரியா அகதிகளுக்கு உதவி செய்வதற்கென சிறப்பு முகநூல் பக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

இந்தப் பக்கத்தில் அகதிகளுக்கு உதவ ஆதரவு தாருங்கள் எனப் பதிவேற்றம் செய்தவுடன் ஆயிரக்கணக்கான நபர்கள் தங்களின் ஆதரவை அளித்துள்ளனர்.

இந்தக் கோரிக்கையை கண்ட ஏறக்குறைய எழுபது விழுக்காட்டு இணையதள பயன்பாட்டாளர்கள் மூன்று மாதங்களுக்குத் தேவையான ஆடைகளையும் வழங்கியுள்ளனர்.

மேலும், அடுத்தாண்டு இறுதிக்குள் ஏறக்குறைய 50,000 சிரியா அகதிகளுக்குப் புகலிடம் வழங்க கானடா அரசு முடிவு செய்துள்ளதால், இந்த நிதி திரட்டும் மற்றும் அத்தியாவசிய பொருட்களைச் சேகரித்து வழங்கும் பணியினை அதிகமாக விரிவுப்படுத்த உள்ளதாக Val Macdonald தெரிவித்துள்ளார். 

ஆதாரம் : தமிழ்வின்/வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.