2015-12-12 15:31:00

சீனாவில் இரக்கத்தின் பல புனிதக் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன


டிச.12,2015. உலகளாவியத் திருஅவை மற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் ஒன்றித்து, சீனாவில் வாழும் கத்தோலிக்க சமூகமும், இரக்கத்தின் சிறப்பு புனித ஆண்டை மிக அர்த்தமுள்ள வகையில் சிறப்பித்து வருகிறது.

Fides செய்தி நிறுவனத்திற்குக் கிடைத்த தகவலின்படி, சீனாவில் பல மறைமாவட்டங்கள் மற்றும் திருஅவை சார்ந்த குழுக்களில், இரக்கத்தின் புனித ஆண்டைத் தொடங்கும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன எனத் தெரிய வந்துள்ளது.

Zhou Zhi மறைமாவட்ட பேராலயத்தில் ஆயர் Wu Qin Jing அவர்கள் தலைமையில் டிசம்பர் 8ம் தேதி நடைபெற்ற புனிதக் கதவு திறக்கும் யூபிலி ஆண்டு ஆரம்ப நிகழ்வில் ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட விசுவாசிகள் கலந்து கொண்டனர். 

மேலும், டிசம்பர் 12,13 தேதிகளில் இதே மறைமாவட்டத்தில், திருச்சிலுவை திருத்தலம், சீன அன்னை மரியா திருத்தலம் ஆகியவற்றிலும் இரக்கத்தின் கதவுகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Jiang Su மாநிலத்திலுள்ள Hai Men மறைமாவட்டம் தொடங்கப்பட்டதன் 90ம் ஆண்டு நிறைவு, அப்பகுதியில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 200ம் ஆண்டு நிறைவு ஆகிய இரண்டையும் இந்த இரக்கத்தின் சிறப்பு புனித ஆண்டில் இணைத்து கொண்டாடுவதற்கும் Hai Men மறைமாவட்டம் திட்டமிட்டுள்ளது. 

ஆதாரம் :  Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.