2015-12-12 15:39:00

யூபிலி ஆண்டின் மன்னிப்பு செய்தி எல்லா மதத்தினருக்கும் உரியது


டிச.12,2015. இரக்கம் மற்றும் மன்னிப்பு குறித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகள், இறைவாக்கினர் முகமது அவர்களின் செய்தியை மீண்டும் நினைவுபடுத்தி, அதற்கு வலுச்சேர்க்கின்றன என்று  இஸ்லாமிய வல்லுனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

‘Misericordiae Vultus’ அதாவது இரக்கத்தின் முகம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆவணம் உலகளாவியச் செய்தியைக் கொண்டிருக்கின்றது, இது உலகில் அனைத்து அரசியல் மற்றும் சமயத் தலைவர்களுக்கும் ஏற்றது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் தெற்கு சுலாவேசி மாநிலத்தில் Makassarலுள்ள Alauddin அரசு இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் M.Qasim Mathar அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.

திருத்தந்தையின் இரக்கத்தின் முகம் ஆவணத்தின் சிந்தனைகளைப் பாராட்டியுள்ள Mathar அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செய்தி கத்தோலிக்கருக்கு மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கும், பிற மதங்களின் நம்பிக்கையாளர் அனைவருக்கும் ஏற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.