2015-12-12 15:45:00

துன்புறும் மக்களுக்காக வந்துள்ளேன்,ஐ.நா.வில் பேராயர் Nieves


டிச.12,2015. Puerto Rico தீவு நாட்டின் வெளிநாட்டுக் கடன் பிரச்சனைக்கு ஒரு சாதகமான தீர்வு காணப்படுவதற்கு, Puerto Rico அரசும், கடன் வழங்கியுள்ள நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துமாறு, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் கேட்டுக்கொண்டார் அந்நாட்டுப் பேராயர் ஒருவர்.

நான் ஒரு வல்லுனராகவோ அல்லது கடன் கொடுத்தவராகவோ இங்கு பேச வரவில்லை, ஆனால் துன்புறும் எனது நாட்டு மக்கள் மீது கொண்டுள்ள மிகுந்த அக்கறையினால் வந்துள்ளேன் என்று ஐ.நா.வில் ஆற்றிய உரையில் கூறினார் San Juan பேராயர் Roberto González Nieves.

உண்மையிலேயே மனிதாபிமான நெருக்கடி உள்ளது என்று, Puerto Rico அரசோ அல்லது கடன் கொடுத்த நாடுகளோ சொல்லலாம், ஆனால் Puerto Ricoவின் வெளிநாட்டுக் கடன் திருப்பிச் செலுத்த முடியாதது என்று கூறினார் பேராயர் Nieves.

மேலும், வருகிற சனவரி முதல் தேதியன்று Puerto Ricoவின் வெளிநாட்டுக் கடன் நூறு கோடி டாலராக இருக்கும் என்று தெரிவித்துள்ள அரசும், இக்கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது என்றே கூறியுள்ளது.

ஆதாரம் : Fides/வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.