2015-12-12 14:30:00

கடுகு சிறுத்தாலும் – காத்திருப்பதிலும் ஆனந்தம்...


"The Little Prince" (by Antoine de Saint-Exupery) என்பது ஒரு கற்பனைக் கதை. அரிதான, அழகான கற்பனை. வெளி உலகத்திலிருந்து நம் பூமிக்கு வந்து சேரும் ஒரு குட்டி இளவரசனின் கதை. அந்தக் கதையில் வரும் இளவரசன் ஒரு நரியைச் சந்திக்கிறான். நட்பு மலர்கிறது. ஒருநாளே நிகழ்ந்த சந்திப்பிற்கு பின், அடுத்த நாள் சிறுவன் வந்ததும் நரி அவனிடம் உரிமையாய், "நீ நேற்று வந்த நேரத்திற்கே வந்திருந்தால், ரொம்ப நன்றாக இருந்திருக்கும்." என்று சொல்கிறது. ஏன் அதே நேரத்திற்கு வரவேண்டும் என்று கேட்கும் இளவரசனுக்கு நரி சொல்லும் விளக்கம் அழகானது. "உதாரணத்திற்கு, நீ நாலு மணிக்கு வருவாய் என்று உறுதியாக எனக்குத்  தெரிந்தால், நான் மூன்று மணிக்கே மகிழ்வில் துள்ளி குதிக்க ஆரம்பித்துவிடுவேன். நீ ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நேரத்திற்கு வந்தால், என் மனம் தயாராக, மகிழ்வாக இருக்கமுடியாதே" என்று நரி சொல்கிறது. நிகழ்ச்சிக்கு முன் மகிழ்ச்சி.  

நடக்கப்போகும் நல்லதொரு நிகழ்வுக்காக, அல்லது, மனதுக்குப் பிடித்த ஒருவரைச் சந்திப்பதற்காகக் காத்திருக்கும் நேரம் மிக ஆனந்தமானது. இதை எல்லாரும் வாழ்வில் உணர்ந்திருப்போம். காத்திருக்கும் ஆனந்தத்தைத் தருவது திருவருகைக் காலம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.