2015-12-11 15:26:00

சமய சுதந்திரத்திற்கு அனைத்துலக அளவில் அழுத்தம் அவசியம்


டிச.11,2015. பாகிஸ்தானில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக, வன்முறையும், நச்சரிப்பும், பாகுபாடும் தொடரும்வேளை, அந்நாட்டில் சமய சுதந்திரம் வழங்கப்படுவதற்கு அனைத்துலக அளவில் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.

சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுமென்று பாகிஸ்தான் அரசு உறுதியளித்திருந்த போதிலும், 2015ம் ஆண்டில் சிறுபான்மை சமூகங்கள், பாகுபாடுகளையும், துன்பங்களையும் அதிகம் எதிர்கொண்டன என்று, ஹைதராபாத் ஆயர் Samson Shukardin அவர்கள் கூறினார்.

லாகூரில் ஆலயங்களுக்குக் குண்டு வைக்கப்பட்டன, பல கிறிஸ்தவர்கள் சிறை வைக்கப்பட்டனர் , சிறுபான்மை சமூகங்களுக்காக அரசு நிறையப் பேசுகின்றதே தவிர அவற்றுக்கு ஆதரவான சட்டங்களைப் பொருத்தவரை மிகக் குறைவாகவே செயல்படுகின்றது என்றும் கூறினார் ஆயர் Shukardin.

பாகிஸ்தானில் மனித உரிமைகள் நிலவரம் மிகவும் மோசமாக உள்ளது, கடந்த அக்டோபரில் ஐ.நா. மனித உரிமைகள் அவையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஓட்டளிக்கப்பட்டது, நாட்டில் சமய சுதந்திரத்திற்கு அனைத்துலக அளவில் அழுத்தம் அவசியம் என்றும் கூறினார் ஆயர் Shukardin.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.