2015-12-09 15:59:00

இரக்கத்தின் யூபிலி ஆண்டில் AIDSநோயாளிகளுக்கு அதிக இரக்கம்


டிச.09,2015. HIV மற்றும் AIDS நோயால் துன்புறும் மக்களுக்கு கூடுதல் இரக்கத்தையும், பாரமரிப்பையும் வழங்க, திருத்தந்தை அறிவித்துள்ள இரக்கத்தின் யூபிலி ஆண்டு உதவி செய்வதாக என்ற விண்ணப்பத்தை, ஆப்ரிக்க, மற்றும் மடகாஸ்கர் ஆயர்கள் விடுத்துள்ளனர்.

அண்மையில் கடைபிடிக்கப்பட்ட உலக எய்ட்ஸ் நாளையும், திருத்தந்தை அறிவித்துள்ள இரக்கத்தின் யூபிலியையும் இணைத்து, ஆயர்கள் வெளியிட்டுள்ள இந்த விண்ணப்பத்தில், பங்குத் தளங்கள், மற்றும் ஏனைய பிறரன்பு நிறுவனங்கள், HIV மற்றும் AIDS நோயால் துன்புறும் மக்களுக்கு இவ்வாண்டில் தங்கள் பணிகளை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

2015ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி முதல், 2016ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி முடிய, "ஆப்ரிக்க ஒப்புரவு ஆண்டு" கடைபிடிக்கப்படுவதும் நமக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு கூடுதல் உந்து சக்தி என்று ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

HIV மற்றும் AIDS நோயால் துன்புறும் மக்களுக்கு இரக்கம் ஒன்றே மிகச் சிறந்த வழியாக அமையும் என்றும் ஆயர்களின் விண்ணப்பம் விழைவதாக பீதேஸ் (Fides) செய்தி கூறுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.