2015-12-08 15:50:00

மின் ஆற்றல் சேமிப்பு காலநிலை மாற்றத்தைக் குறைக்க உதவும்


டிச.08,2015. இப்பூமி எதிர்கொள்ளும் வெப்பநிலை அதிகரிப்புக்கு எதிரான நடவடிக்கையில் மின் ஆற்றலை சேமிப்பது மூன்று மடங்கு வெற்றியைத் தரும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார்.

பாரிசில் நடந்துவரும் COP-21 காலநிலை உச்சி மாநாட்டில் இத்திங்களன்று பேசிய பான் கி மூன் அவர்கள், ஆப்ரிக்காவில் புதுப்பிக்கக்கூடிய மின்சக்திப் பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்கென 500 கோடி டாலர் திட்டத்தை ஐ.நா.வும், நன்கொடையாளர்களும் ஆரம்பித்துள்ளது பற்றியும் குறிப்பிட்டார்.

மின் சக்தியைச் சேமிப்பது, கார்பன் வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும், பணத்தை மிச்சப்படுத்தும் என்றும் தெரிவித்தார் பான் கி மூன். 

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.