2015-12-08 15:51:00

தமிழகம்-வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்க்கு உதவிக்கு விண்ணப்பம்


டிச.08,2015. தமிழகத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்கு உதவிக்கு விண்ணப்பித்துள்ளது இந்தியத் திருஅவை.

தமிழகத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால்  Baselios Cleemis அவர்கள், அடுத்த சில நாள்களில் காரித்தாஸ் இந்தியா பத்தாயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்குத் திட்டமிட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

ஆயிரக்கணக்கான மக்கள் அடிப்படைத் தேவைகளின்றித் துன்புறுகின்றனர் என்றும்,   ஆயர்களும், குருக்களும், துறவிகளும் நன்மனம் கொண்ட அனைவரும் தன்னார்வத்துடன் நன்கொடைகள் வழங்குவதற்கு மக்களை ஊக்கப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார் கர்தினால்  Cleemis.

பள்ளிகள், ஆலயங்கள், மசூதிகள், திரையரங்குகள் என 4,500க்கும் மேற்பட்ட இடர்துடைப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : CBCI /வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.