2015-12-08 16:03:00

கடுகு சிறுத்தாலும் : நல்லதைச் செய்ய நினைக்கும்போதே செய்க


ஒரு நாள் பாண்டவர்கள் உணவருந்திக் கொண்டிருந்தபோது ஏழை ஒருவர் வந்து தருமரிடம் ‘ஐயா நான் வறுமையில் வாடுகிறேன் ஏதாவது உதவி செய்யுங்கள்’ என்றார். உடனே தருமர் தனது இடது கையால் பக்கத்திலிருந்த வெள்ளிக் கிண்ணத்தை எடுத்து தானமாகக் கொடுத்தார். ஏழை வாங்கிச் சென்றதும், பீமன், ‘அண்ணா இடது கையால் செய்வது பாவமாயிற்றே. தர்ம பலனும் இல்லையே. எல்லா சாஸ்திரங்களையும் அறிந்த நீங்கள் இப்படிச் செய்யலாமா?’ என்று கேட்டார். “தம்பி, ஏழையின் துயரினைக் கேட்டதும் மனமிளகி அவனுக்கு வெள்ளிக் கிண்ணத்தை கொடுக்கும் எண்ணம் ஏற்பட்டது. நான் சாப்பிட்டுக் கைகழுவி வந்த பின்பு தரலாம் என்றால் அதற்குள் இந்தப் பொல்லாத மனம் எப்படி மாறிவிடுமோ? ஒரு வேளை வேறு ஏதாவது பொருளைக் கொடுத்தால் போதாதா? வெள்ளிக் கிண்ணம் எதற்கு?” என்று தோன்றலாம். எனவே நல்லதைச் செய்ய நினைக்கும்போது அந்த நொடியிலேயே செய்வது நல்லது. அதனால் நமக்கு ஏற்படும் நன்மை தீமையைவிட பிறருக்கு ஏற்படும் நன்மையே முக்கியம் என்றார் தருமர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.