2015-12-07 15:57:00

போபால் விஷவாயுக் கசிவின் பின்விளைவை ஆய்வு செய்ய கோரிக்கை


டிச.07,2015. இந்தியாவின் போபால் நகரில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டு ஏறக்குறைய 31 ஆண்டுகள் ஆகிய பின்னரும் குடிமக்கள் தொடர்ந்து துன்பப்படும்வேளை, இந்தக் கோர விபத்தின் தாக்கம் குறித்து விரிவான ஆய்வு நடத்துமாறு கேட்டுள்ளார் போபால் பேராயர் லியோ கொர்னேலியோ.

போபாலில் விஷவாயுக் கசிவு விபத்தால் தாக்கப்பட்டு உயிர்வாழும் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு நலவாழ்வுப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படாமல் இருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளார் பேராயர் கொர்னேலியோ. 

மத்திய பிரதேச மாநிலத் தலைநகரான போபாலின் புறநகர்ப் பகுதியிலுள்ள யூனியன் கார்பைடு தொழிற்சாலையில், 1984ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி ஏறக்குறைய நாற்பது டன் மீத்தைல் ஐசோனேட் விஷவாயுக் கசிந்ததில், 5,300 பேர் இறந்தனர் மற்றும் ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த வாயுக் கசிவால், மண் வேதியப் பொருளால் மாசடைந்தது மற்றும் பிற பின்விளைவுகளால் கடந்த 30 ஆண்டுகளில் ஏறக்குறைய 25 ஆயிரம் பேர் இறந்துள்ளனர் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.   

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.