2015-12-07 15:40:00

தன்னார்வலர்கள், படைப்பாற்றலை ஊக்குவிக்கின்றனர், ஐ.நா.


டிச.07,2015. தன்னார்வலர்கள், படைப்பாற்றலை ஊக்குவிக்கின்றனர், நம் அன்பிலிருந்து சக்தி பெறுகின்றனர் மற்றும் உதவி அதிகம் தேவைப்படும் மக்களோடு நமக்குத் தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கின்றனர் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார்.

உலக தன்னார்வலர்கள் நாளுக்கென வெளியிட்ட செய்தியில் இவ்வாறு கூறியுள்ள பான் கி மூன் அவர்கள், தன்னார்வலர்தன்மை உலகளாவிய கூறைக் கொண்டது, இது எல்லைகளையும், மதங்களையும், கலாச்சாரங்களையும் கடந்து செயல்படுவது என்று குறிப்பிட்டுள்ளார்.

2030ம் ஆண்டின் ஐ.நா.வின் வளர்ச்சித்திட்ட இலக்குகள் நிறைவேற்றப்படுவதற்கு உதவுமாறும் தன்னார்வலர்களைக் கேட்டுள்ளார் பான் கி மூன்.

உறுதியான மாற்றங்களும், அமைதியும் ஏற்படுவதற்கு இலட்சக்கணக்கான மக்கள் மத்தியில் பணியாற்றும் 6,300க்கு மேற்பட்ட ஐ.நா. தன்னார்வலர்கள் மற்றும் 11,000த்துக்கு மேற்பட்ட ஐ.நா.வின் இணையதள தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் பான் கி மூன்.

உலக தன்னார்வலர்கள் நாள் 1986ம் ஆண்டிலிருந்து டிசம்பர் 5ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.