2015-12-05 15:35:00

புவர்த்தோ ரிக்கோவால் கடனை திருப்பிச் செலுத்த இயலாது


டிச.05,2015. மிக அதிகமான வெளிநாட்டுக் கடனைக் கொண்டுள்ள புவர்த்தோ ரிக்கோ நாடு பசியிலும் ஏழ்மையிலும் வாடுவதால், அந்நாட்டினால் கடனைத் திருப்பிச் செலுத்த இயலாது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு பேராயர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏழாயிரம் கோடி டாலருக்கு மேற்பட்ட வெளிநாட்டுக் கடனைக் கொண்டுள்ள புவர்த்தோ ரிக்கோ நாடு பற்றி அமெரிக்க ஐக்கிய நாட்டு காங்கிரஸ் அவைக்கு கடிதம் எழுதியுள்ள, அமெரிக்க ஆயர் பேரவையின் நீதி மற்றும் மனித முன்னேற்ற பணிக்குழுத் தலைவர் மியாமி பேராயர் தாமஸ் வென்ஸ்கி அவர்கள், புவர்த்தோ ரிக்கோவின் நிலைமையை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

வறுமை, பசி, கடும் வேலைவாயப்பின்மை மற்றும் பிற சமூகப் பிரச்சனைகளைக் கொண்டிருக்கும் புவர்த்தோ ரிக்கோ நாட்டின் நிதி நெருக்கடி காரணமாக பொருளாதாரமும் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் பேராயரின் கடிதம் கூறுகின்றது.

கடனை அடைக்க வழியில்லாத நிலையில் அமெரிக்க நகரங்களுக்கு வழங்கப்படும் சலுகையே புவர்த்தோ ரிக்கோ நாட்டிற்கும் வழங்கப்படுமாறு கேட்டுள்ளார் பேராயர் வென்ஸ்கி. புவர்த்தோ ரிக்கோவில் 45 விழுக்காட்டிற்கு மேற்பட்ட மக்கள் வறுமையில் வாழ்கின்றனர்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.