2015-12-05 15:40:00

பெங்களூரு உயர்மறைமாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அலுவலகம்


டிச.05,2015. இந்தியாவின் பெங்களூரு உயர்மறைமாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

உலக மாற்றுத்திறனாளிகள் நாளான டிசம்பர் 03, இவ்வியாழனன்று திறக்கப்பட்டுள்ள இந்த அலுவலகம், இம்மக்களுக்கு உதவும் எண்ணமுடைய நிறுவனங்கள், குழுக்கள் மற்றும் தனிநபர்களுடன் சேர்ந்து பணிசெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகத்தைத் திறந்து வைத்துப் பேசிய பெங்களூரு பேராயர் Bernard Moras அவர்கள், ஆலயங்களுக்கு வருகின்ற மற்றும் நிறுவனங்களில் இருக்கின்ற மாற்றுத்திறனாளிகளின் முக்கிய தேவைகளை நிறைவேற்றுவது உயர்மறைமாவட்டத்தின் கடமை என்பதால், இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

இந்தியாவின் 2.2 விழுக்காட்டு மக்கள், அதாவது 2 கோடியே 70 இலட்சம் பேர் உடலளவில் மாற்றுத்திறனாள் என்று அரசின் புள்ளி விபரம் தெரிவிக்கிறது. 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.