2015-12-04 16:04:00

San Bernardinoவில் வன்முறையில் பலியானவர்களுக்காகச் செபம்


டிச.04,2015. அமெரிக்க ஐக்கிய நாட்டின் San Bernardinoவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு வன்முறையில் பாதிக்கப்பட்ட மற்றும் பலியான மக்களுக்காகச் செபிக்குமாறு San Bernardino ஆயர் Gerald  Barnes அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்கென அரசு நடத்தும் மையத்தில் ஆயுதம் ஏந்திய 28 வயதான Syed Farook, 27 வயதான Tashfeen Malikம் சுட்டதில் 14 பேர் இறந்துள்ளனர் மற்றும் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்வன்முறை குறித்து அறிக்கை வெளியிட்ட ஆயர் Barnes அவர்கள், பல ஆண்டுகளாக  San Bernardino சமூகம் பெரிய சவால்களை எதிர்நோக்கி வருகிறது என்றும், இந்த இருளான இந்நாளில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செபிப்போம் என்று கூறியுள்ளார்.

இவ்வன்முறை குறித்து அறிக்கை வெளியிட்ட Philadelphia பேராயர் Charles J. Chaput அவர்கள், இத்துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளன என்றும், ஒவ்வோர் உயிரும், குடும்பம் மற்றும் நட்பு வழியாக பிறரோடு நெருங்கிய தொடர்பு கொண்டது என்றும் கூறியுள்ளார். 

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.