2015-12-03 15:48:00

போதைப்பொருள் வர்த்தகம் குறித்து அர்ஜென்டீனா ஆயர்கள் கவலை


டிச.03,2015. உலகமயமாக்கப்பட்ட அக்கறையின்மை என்ற தீய வலையில் சிக்கியுள்ள அர்ஜென்டீனா மக்கள் தங்கள் சுயநலத்தில் மட்டுமே அக்கறை கொள்வதால், போதைப்பொருள் வர்த்தகம் தழைத்து வருகிறது என்று அர்ஜென்டீனா ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

"போதைப்பொருள் வர்த்தகம் வேண்டாம், வாழ்வு வேண்டும்" என்ற மையக்கருத்துடன், அர்ஜென்டீனா ஆயர்கள் விடுத்துள்ள இந்த அறிக்கையில், போதைப்பொருள் வர்த்தகமும், பயன்பாடும் தங்கள் நாட்டின் பெரும் அழிவு என்று குறிப்பிட்டுள்ளனர்.

அர்ஜென்டீனா அரசு, நீதித் துறை, காவல் துறை அனைத்தையும் விட, போதைப்பொருள் வர்த்தக உலகம் சக்தி வாய்ந்ததாக அமைந்துள்ளதால், அவ்வுலகம் தனக்கென சட்ட திட்டங்களை வகுத்து, வன்முறைகளையும், மோதல்களையும் உருவாக்குகின்றன என்று ஆயர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அர்ஜென்டீனா ஆயர்கள் பேரவையின் கூட்டம் நவம்பர் மாத மையத்தில் முடிவடைந்தாலும், அதன் அறிக்கை, புதிய அரசுத் தலைவர் தேர்தலுக்காக காத்திருந்து, தற்போது வெளியிடப்பட்டுள்ளது என்று ­ஃபிதேஸ் (Fides) செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.