2015-12-03 15:14:00

திருத்தந்தை பெற்ற இரக்கத்தின் யூபிலி இறைவார்த்தை நூல்


டிச.03,2015. இரக்கத்தின் யூபிலிக்கென நான்கு நற்செய்திகளிலிருந்து தொகுக்கப்பட்டுள்ள இறைவார்த்தைப் பகுதிகள் அடங்கிய நூல் ஒன்று, இவ்வியாழன் காலை, திருத்தந்தையிடம் வழங்கப்பட்டது.

நற்செய்தியின் புதியவழி அறிவிப்பு திருப்பீட அவையின் தலைவர் பேராயர் ரீனோ பிசிக்கெல்லா அவர்களின் முன்னுரையும், இயேசு சபை அருள் பணியாளர் மார்க்கோ ரூப்னிக் அவர்கள் உருவாக்கிய  ஓவியங்களும் அடங்கிய இந்நூல், ஒரு சிறப்புப் பேழையில் வைக்கப்பட்டு, திருத்தந்தையிடம் வழங்கப்பட்டது.

மேலும், இவ்வியாழன் காலை 10 மணியளவில், சமோவா (Samao) நாட்டின் பிரதமர், Tuilaepa Fatialofa Lupesolial Sailele Mallelegaoi அவர்கள், தன் துணைவியாருடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்தார்.

பாரிஸ் மாநகரில், காலநிலை மாற்றம் உச்சி மாநாடு நடைபெறுவதையடுத்து, இச்சந்திப்பில், பசிபிக் தீவுகளில் உருவாகியுள்ள சுற்றுச்சூழல் ஆபத்துக்களைக் குறித்து பேசபட்டதென திருப்பீடம் அறிவித்துள்ளது.

இச்சந்திப்பிற்குப் பின்னர், சமாவோ பிரதமர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் துறையின் நேரடிச் செயலர், அருள்பணி Antoine Camilleri அவர்களையும் சந்தித்துப் பேசினார். 

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.