2015-11-26 14:21:00

கடுகு சிறுத்தாலும் – பிறர் பேசுவது என்ன என்று எனக்குத் தெரியுமா?


அந்தக் கடையின் விற்பனையாளர், ஒரு வாடிக்கையாளர் பெண்ணிடம், இல்லை, மேடம், இப்போது சில வாரங்களாகவே அது இப்பகுதியில் இல்லை. விரைவில் அது இப்பகுதிக்குக் கிடைக்கும் என்றும் தோன்றவில்லை என்று சொன்னார். அதற்குப் பின்னர் வாடிக்கையாளர் பெண்ணும் அங்கிருந்து சென்று விட்டார். விற்பனையாளர் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த அந்தக் கடையின் உரிமையாளர் பயந்துபோய், அந்தப் பெண்ணின் பின்னாலே ஓடிச்சென்று, மேடம், அது உண்மையில்லை, விரைவிலேயே நாங்கள் அதைத் தருவித்து விடுவோம். உண்மையில் அதற்கான அனுப்பாணையை ஒரு சில வாரங்களுக்கு முன்பே நாங்கள் அனுப்பி விட்டோம் என்று சொன்னார். அதற்குப் பிறகு அந்த விற்பனையாளரை அழைத்து கோபமாக இப்படிச் சொன்னார் உரிமையாளர்.  எந்தப் பொருளும் நம்மிடம் இல்லை என்று ஒருபோதும், ஒருபோதும்... சொல்லாதே. நம்மிடம் பொருள் இல்லையென்றால் அதைத் தருவிக்க ஏற்பாடு செய்தாகி விட்டது, அது வந்து கொண்டிருக்கின்றது என்றே சொல். சரி, அந்தப் பெண் என்ன வேண்டுமென்று கேட்டார் என்று இப்போது சொல் என்றார் உரிமையாளர். அதற்கு விற்பனையாளர், மழை வருமா என்றே அப்பெண் கேட்டார் என்று சொன்னார். அன்பர்களே, மற்றவர் என்ன பேசிக் கொண்டிருக்கிறார் என்பது பற்றி நமக்குத் தெரியும் என்று எண்ணக் கூடாது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.