2015-11-24 15:36:00

69 கோடிச் சிறார், காலநிலை மாற்றத்தால் அச்சுறுத்தல்


நவ.24,2015. உலகின் 230 கோடிச் சிறாரில் ஏறக்குறைய 69 கோடிச் சிறார், காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழ்கின்றனர் என்று ஐ.நா.வின் யூனிசெப் குழந்தை நல நிறுவனத்தின் புதிய அறிக்கை கூறுகிறது.

காலநிலை மாற்றம் குறித்த பாரிஸ் உலக மாநாட்டை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள யூனிசெப் நிறுவனம், ஏறக்குறைய 53 கோடிச் சிறார், பெருவெள்ளம், வெப்பமண்டல புயல்கள், போன்றவற்றால் அதிகமாகத் தாக்கப்பட்ட நாடுகளில், பெரும்பாலும் ஆசியாவில் வாழ்கின்றனர் என்று கூறியுள்ளது.

மேலும் 16 கோடிச் சிறார், கடும் வறட்சியால் துன்புறும் பகுதிகளில், குறிப்பாக ஆப்ரிக்காவில் உள்ளனர் என்றும், காலநிலை மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் சிறார், இறப்பு, நோய் மற்றும் வறுமைக்கு உள்ளாகின்றனர் என்றும் யூனிசெப் கூறியுள்ளது.

உலகளாவிய வெப்பநிலை உயர்வை 2 செல்சியுஸ் டிகிரி அளவு குறைப்பதற்கு ஏற்கனவே நாடுகள் உறுதியளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.