2015-11-21 15:47:00

பாங்காக்கில் One Young உலக இளையோர் மாநாடு


நவ.21,2015. கல்வி, சுற்றுச்சூழல், உலகளாவிய பொருளாதாரம், மனித உரிமைகள், பாதுகாப்பு, அமைதியைக் காத்தல் போன்ற முக்கிய தலைப்புகளில், ஆறாவது One Young உலக இளையோர் மாநாடு பாங்காக்கில் இச்சனிக்கிழமையன்று நிறைவடைந்துள்ளது.

195 நாடுகளிலிருந்து, 18க்கும், முப்பது வயதுக்கும் உட்பட்ட 1,350 பிரதிநிதிகள் கலந்துகொண்ட இம்மாநாடு, இப்புதன் முதல் இச்சனிக்கிழமை வரை நடைபெற்றது. 

ஆசியாவில் முதன்முறையாக நடைபெற்ற இம்மாநாட்டில் உரையாற்றிய, 2015ம் ஆண்டு நொபெல் அமைதி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட அருள்பணி Mussie Zerai அவர்கள், இக்காலத்தில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், புலம்பெயர்ந்தவரின் நெருக்கடி நிலைகளைக் களைவதற்கும் ஊடகத்துறைக்கு முக்கிய பொறுப்பு உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டினார்.   

முன்னாள் ஐ.நா.பொதுச் செயலர் கோஃபி அன்னான் அவர்களும் இதில் கலந்துகொண்டு உரையாற்றினார். 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.