2015-11-18 15:52:00

கத்தோலிக்கக் கல்வி நிலையங்களின் உலகக் கருத்தரங்கு


நவ.18,2015. நவம்பர் 18, இப்புதன் முதல், 21, வருகிற சனிக்கிழமை முடிய, காஸ்தெல் கந்தோல்போ எனுமிடத்தில், கத்தோலிக்கக் கல்வி பேராயம் ஏற்பாடு செய்துள்ள ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கு நடைபெறுகிறது.

"கல்வி, இன்றும் நாளையும்: மறுமலர்ச்சி பெறும் ஆர்வம்" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த கருத்தரங்கில், உலகெங்கிலும் இயங்கிவரும் கத்தோலிக்கப் பள்ளிகள், மற்றும் பல்கலைக் கழகங்களின் பொறுப்பாளர்கள் 2000த்திற்கும் அதிகமானோர் பங்கேற்கின்றனர்.

பல்சமயங்கள் மற்றும் பன்முகக் கலாச்சாரம் என்ற உலகளாவியச் சூழலில், கத்தோலிக்கக் கல்வியாளர்கள் பெறவேண்டிய பயிற்சிகளும், மாணவர்களை வழிநடத்தும் முறைகளும் இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்க கல்வி நிலையங்களில் மனம் திறந்த, நலமான உரையாடல் கலாச்சாரம் நிலவும் வழிகள் இக்கருத்தரங்கில் சிறப்பாக விவாதிக்கப்படும் என்று அமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

கருத்தரங்கில் கலந்துகொள்ளும் உறுப்பினர்கள், நவம்பர் 21, சனிக்கிழமையன்று திருத்தந்தையைச் சந்திக்கும் நிகழ்வுடன், இக்கருத்தரங்கு நிறைவுக்கு வரும் என்று கத்தோலிக்கக் கல்வி பேராயம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.