2015-11-17 16:02:00

கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுக்கும் பொருள்


நவ.17,2015. வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர் காலம் மற்றும் பிற நாள்களில் மக்களுக்கு குடிநீர் பஞ்சத்தைப் போக்குவதற்கு உதவும் வகையில், கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுக்கும் வகையிலான ஒரு பொருளை, அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின், Illinois பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியியலாளர்களும், அறிவியலாளர்களும் இணைந்து, 'நானோபோர்ஸ்' என்ற, நுண்ணிய பொருளைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதிலுள்ள சிறிய ஓட்டைகளில், அளவுக்கு அதிகமான நீரைச் செலுத்துவதன் வழியாக, அந்த நீரில் உள்ள உப்பு, வடிகட்டப்பட்டு, குடிநீராக நமக்கு கிடைக்கும். இதற்கு, மிகவும் குறைவாகவே செலவாகும் என, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொறியியலாளர்கள் பயன்படுத்தும், 'நானோ மீட்டர்' என்ற ஒரு வகை அட்டையிலிருந்து, (MoS2) நானோபோர்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

ஆதாரம் : தினமலர் / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.