2015-11-17 15:32:00

அமேசான் பகுதிக்கு நல்லதோர் எதிர்காலம் இன்றியமையாதது


நவ.17,2015. அடக்குமுறை, இழிவான மனிதம், இன அழிப்பு ஆகியவற்றை வரலாறாகக் கொண்டிருக்கும் அமேசான் பகுதி, மாறுபட்ட எதிர்காலத்தைக் கொண்டிருப்பதற்கு எல்லாத் தகுதியும் உள்ளது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் Bogotàவில் அமெரிக்க-அமேசான் கூட்டமைப்பு இத்திங்களன்று தொடங்கியுள்ள கருத்தரங்குக்குச் செய்தி அனுப்பியுள்ள திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், இவ்வாறு கூறியுள்ளார்.

பாரிஸ், பெய்ரூட், ஈராக், சிரியா போன்ற பகுதிகளில் இடம்பெற்றும் வெட்கத்துக்குரிய தாக்குதல்களின் கண்ணோட்டத்தில் அமேசான் பகுதி விவகாரத்தைக் குறிப்பிட்டுள்ள கர்தினால் டர்க்சன் அவர்கள், நம் கண்முன்னே அறிவற்ற பல போர்களும், சகோதரத்துவ வன்முறைச் செயல்களும் இடம்பெறுவதை நாம் உணர்கின்றோமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

நம் மண்ணும், நீரும், இவ்வுலகின் உயிரினங்களும் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உல்ளாகி வரும்போது ஏதோ தவறுகள் நடக்கின்றன என்பதை நாம் உணர்கின்றோமா என்றும் கேட்டுள்ளார் கர்தினால் டர்க்சன்.

Bogotàவில் நடைபெற்றுவரும் இக்கருத்தரங்கு, இப்புதனன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.