2015-11-14 15:48:00

இப்பூமியைக் காப்பாற்றுவதற்கு பிலிப்பைன்ஸ் ஆயர்கள் பரிந்துரை


நவ.14,2015. பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் உச்சிமாநாடு அண்மித்துவரும்வேளை, இப்பூமியைக் காப்பாற்றுவதற்கு சில தெளிவான நடைமுறைகளை வகுத்துள்ளனர், பிலிப்பைன்ஸ் ஆயர்கள்.

பருவநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கு, மரங்கள் நடுதல், பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்தல், வாகனத்தில் செல்வதைவிட நடத்தல் என, பதினைந்து நடைமுறைகளை ஊக்குவித்துள்ளனர் ஆயர்கள்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு தலத்திருஅவைகள் திட்டவட்டமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது Laudato si’ திருமடலில் கேட்டுக்கொண்டுள்ளதன்பேரில் பிலிப்பைன்ஸ் ஆயர்கள் இவ்வாறு தங்களின் பரிந்துரைகளை வெளியிட்டுள்ளனர்.

பருவநிலை மாற்றத்தைப் புரிந்துகொண்டு செயல்படுவோம் என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ள அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் சாக்ரட்டீஸ் வியேகாஸ் அவர்கள், அனைத்துக் கத்தோலிக்கரும் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கையில் இறங்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

பிலிப்பைன்ஸ் அரசு, கார்பன் வெளியேற்றத்தை, எழுபது விழுக்காடு வரை குறைப்பதாக உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.