2015-11-11 16:36:00

மியான்மார் தேர்தல் ஒரு புது யுகத்தைக் கொணரும் – ஆயர்


நவ.11,2015. மியான்மாரில் நடைபெற்றுள்ள தேர்தல், அந்நாட்டிற்கு ஒரு புது யுகத்தைக் கொணர்வதோடு, நம்பிக்கையையும், அமைதியையும் கொணரும் என்று தான் நம்புவதாக, அந்நாட்டு ஆயர், John Hsane Hgyi அவர்கள் கூறியுள்ளார்.

ஆங் சான் சூசி அவர்கள் தலைமையில் போட்டியிட்ட குடியரசு தேசியக் கட்சி வெற்றி பெற்றுள்ளது என்றும், இராணுவத் தளபதி Thein Sein அவர்கள் தலைமையில் இயங்கிவரும் கட்சி, தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, வெற்றிபெற்ற தலைவர், சூசி அவர்களை வாழ்த்தியதாகவும் Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

அச்சமின்றி மக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய முடிந்தது என்று கூறிய ஆயர் Hgyi அவர்கள், மாற்றத்தையும், சுதந்திரத்தையும் கொணரும் இப்புதிய யுகம், மியான்மார் தலத்திருஅவைக்கும் உதவியாக அமையும் என்று கூறினார்.

எதிர்காலம் இன்னும் பல சவால்களைக் கொணரும் என்றாலும், மக்கள் ஒப்புரவுடன், ஒற்றுமையுடன் இச்சவால்களை எதிர்கொள்ள முடியும் என்பதையும் ஆயர் Hgyi அவர்கள், Fides செய்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.