2015-11-09 15:43:00

சிரிய கோவில் தாக்குதலுக்குப் பின் மக்களின் விசுவாச மேம்பாடு


நவ.09,2015. சிரியாவின் அலெப்போ நகரிலுல்ள புனித பிரான்சிஸ் கோவிலின் மேல்கோபுரம் கடந்தவார வான் தாக்குதலால் சேதமடைந்தபோதிலும், இஞ்ஞாயிறன்று அப்பகுதி மக்கள், கோவிலுக்கு வெளியே பெருங்கூட்டமாகக் கூடி, திருப்பலியில் கலந்துகொன்டனர்.

மேல்கூரை தாக்கப்பட்டதால், கோவிலின் பாதிப்பு அதிகமாக இருக்கின்ற போதிலும் அன்னைமரியே உயிரிழப்புகளிலிருந்து தங்களை காப்பாற்றியதாக

விசுவாசிகள் முழுமையாக நம்புவதால், திருப்பலிக்கு வந்தோரின் எண்ணிக்கை பெரிய அளவில் இருந்ததாக, அருள்பணி Ibrahim Alsabagh அவர்கள் தெரிவித்தார்.

அக்டோபர் 25ம் தேதி, ஞாயிறன்று, அலெப்போ கோவிலில் இடம்பெற்ற தாக்குதலின்போது, திருப்பலியில் 400பேர் பங்கு பெற்றிருந்த நிலையில், எவ்வித உயிர்சேதமும் இன்றி, ஒரு சிலர் மட்டுமே சிறு காயமுற்றனர்.

இச்லாமிய தீவிரவாதிகளால் இந்தக் கோவிலில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கனவே, இக்கோவில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு ஆண்டுகளாக இடம்பெறும் சிரியாவின் உளநாட்டுப்போரில், தற்போது இரஷ்ய துருப்புகள் நுழைந்துள்ளதைத் தொடர்ந்து, கிறிஸ்தவக் கோவில்கள் மீதான இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களின் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன.

இத்தாக்குதல்கள் குறித்து கவலையை வெளியிட்ட அருள்பணி  Alsabagh, கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும், ஒப்புரவிலும், திறந்த மனதுடனும் வாழ்வதை விரும்பாத தீவிரவாதிகளே, இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடுவதாக உரைத்தார். 

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.