2015-11-03 16:33:00

வாழ்வுக்கு ஆதரவாக கனடா மதங்களின் ஒன்றிணைந்த குரல்


நவ.03,2015. நோயில் துன்புறுவோரை கொல்வதற்கு பதில், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதே எதிர்பார்க்கப்படுகிறது என கனடாவின் பல்சமயத் தலைவர்கள் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கருணைக்கொலையை சட்டபூர்வமாக்க, கனடா அரசு முயன்று வரும் வேளையில், அந்நாட்டின் கத்தோலிக்க, Protestant கிறிஸ்தவ சபைகள், யூத மற்றும் இஸ்லாம் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒருவரின் வாழ்வை முடிவுக்குக் கொணர்வது ஒழுக்க ரீதியிலும், அறநெறி சார்ந்தும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என குறிப்பிட்டுள்ளனர்.

நோயால் துயருறுவோரின் துன்பங்களை அகற்றவேண்டுமேயொழிய, அவர்களின் உயிர்களை அல்ல எனக் கூறும் அவ்வறிக்கை, மனித குலத்தின் ஒழுக்க ரீதி பலம், ஒருவர் மற்றவர்மீது காட்டும் ஒருமைப்பாட்டை சார்ந்துள்ளது எனவும் தெரிவிக்கிறது.

கனடா கத்தோலிக்க ஆயர் பேரவை, 40 Protestant கிறிஸ்தவ சபைகள், 20 யூத மற்றும் இஸ்லாம் அமைப்புகள் ஆகியவை இணைந்து, வாழ்வுக்கு ஆதரவான இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.