2015-11-03 16:16:00

வாழ்வின் நோக்கங்கள் குறித்து சிந்திக்க திருத்தந்தை அழைப்பு


நவ.03,2015. நமக்குப் பின்வரும் தலைமுறைக்கு எத்தகைய உலகை நாம் விட்டுச் செல்லப்போகிறோம் என்று கேள்வி எழுப்பும் திருத்தந்தை, நாம் இவ்வுலகில் வாழ்வதன் நோக்கங்கள் குறித்து சிந்திக்கவும் அழைப்பு விடுக்கிறார் என்று கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் கூறினார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் Ohio மாநில பல்கலைக் கழகத்தில், திருத்தந்தையின் 'இறைவா உமக்கே புகழ்' திருமடல் குறித்து உரையாற்றிய, திருப்பீடத்தின் நீதி அமைதி அவைத் தலைவர் கர்தினால் டர்க்சன் அவர்கள், இன்றைய உலகில் இயற்கை அழிக்கப்பட்டு வருவதற்கு, மனிதரின் பேராசைகளும், தவறான அணுகு முறைகளும் காரணம் என்பதைச் சுட்டிக்காட்டி, இதனால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாவது ஏழைகளே என்ற கவலையையும் வெளியிட்டார்.

ஏழைகளுக்கும் இயற்கைப் பாதுகாப்பிற்கும் உள்ள தொடர்பு, ஒவ்வொரு படைப்பின் மதிப்பு, இயற்கையைப் பொருத்தவரை, மனிதர்கள் கொண்டிருக்கும் பொருள், இயற்கையைப் பாதுக்காக்கும் சட்டங்கள், பொருள்களை வீணாக்கும் கலாச்சாரம், புதிய வாழ்வு முறையைப் பின்பற்றுதல், பொருளாதாரம், மற்றும் வளர்ச்சியைப் புரிந்துகொள்ள புது வழிமுறைகள் ஆகிய கருத்துக்களில், கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையை வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.