2015-10-30 13:57:00

கடுகு சிறுத்தாலும்.. : பதவி தேடி அலையும் கழுதைகள்


அமெரிக்க முன்னாள் அரசுத் தலைவர் ஆபிரஹாம் லிங்கன், ஒருமுறை கூறிய கதை இது: மன்னர் ஒருவர் வேட்டையாடப் போவதற்கு முன் தனது அமைச்சரை அழைத்து ,''மழை வருமா?'' எனக் கேட்டாராம். “வராது”' என்றார் அமைச்சர். ஆனால், வழியிலே ஒரு கழுதை மேல் வந்து கொண்டிருந்த குடியானவர் ஒருவர், கொஞ்ச நேரத்தில் மழை வரும் என எச்சரித்தார். அதைப் பொருட்படுத்தாமல் போன மன்னர், வேட்டையாடிக் கொண்டிருந்தபோது கடும் மழை வந்து, நன்றாக நனைந்து போனார். திரும்பும் வழியில் குடியானவரைச் சந்தித்து, ''மழை வரும் என்று உனக்கு எப்படித் தெரியும்?'' எனக் கேட்டார். குடியானவரோ, ''மன்னா, எனக்குத் தெரியாது. ஆனால் என் கழுதைக்குத் தெரியும். மழை வரும் முன் அது தன் காதுகளை முன்னுக்கு நீட்டிக் கொள்ளும்.''என்றார். உடனே மன்னர், அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கி விட்டு கழுதையை அமைச்சராக்கினார்.

இக்கதையை ஆபிரஹாம் லிங்கன் கூறியபின், ''கழுதையை அமைச்சராக்கியதில் தான் மன்னர் ஒரு தவறு செய்து விட்டார். என்னவெனில், அது முதற்கொண்டு எல்லாக் கழுதைகளும் ஏதாவது பதவி வேண்டும் என அலைகின்றன'' என்று சொன்னார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.