2015-10-29 16:44:00

திருத்தந்தையின் அணுகுமுறை குறித்து யூத சமூகம் பாராட்டு


அக்.29,2015. யூதர்களுக்கு எதிராகவும், இஸ்ரேல் நாட்டிற்கு எதிராகவும் நடத்தப்படும் தாக்குதல்கள் யூத விரோதப் போக்கைக் காட்டுகின்றன எனவும், அவை நிறுத்தப்படவேண்டும் எனவும், இப்புதனன்று திருத்தந்தை விடுத்த அழைப்பு குறித்து, தன் மகிழ்வையும் நன்றியையும் வெளியிட்டுள்ளன யூத குழுக்கள்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எப்போதுமே வெற்று வார்த்தைகளை வெளியிடுவதில்லை, அவரின் வார்த்தைகள் எப்போதும் கருணையின் வார்த்தைகளாக இருக்கும் என்ற உலக யூத அவையின் தலைவர் ரொனால்டு லவ்டர் அவர்கள், திருத்தந்தையின் ஆதரவு, யூதர்களுக்கு எப்போதும் தேவை என்றார்.

கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே நிலவி வந்த பாராமுகமும், எதிர்ப்பும், கடந்த 50 ஆண்டுகளில் படிப்படியாக ஒத்துழைப்பு மற்றும் நல் ஆதரவாக மாறியுள்ளன என்ற திருத்தந்தையின் வார்த்தைகளையும் சுட்டிக்காட்டி மகிழ்ச்சியை வெளியிட்டார் யூதத் தலைவர்.

இப்புதனன்று நடைபெற்ற பொது மறைக்கல்வி உரையின்போது, பல்வேறு மதத் தலைவர்களைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 100க்கும் மேற்பட்ட யூதத் தலைவர்களையும் சந்தித்து உரையாடினார். 

ஆதாரம் : CatholicNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.