2015-10-21 16:29:00

கடுகு சிறுத்தாலும்:நீரின்மீது நடப்பதா? புறங்கூறாமல் வாழ்வதா?


ஒரு நாள், சீடர் ஒருவர், தனது குருவைப் பார்த்து ஆசிர் பெற்று வரலாம் என்று சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்து கொண்டிருந்த யோகி ஒருவர், அந்தச் சீடரைப் பார்த்து, எங்கப்பா போறே என்று கேட்டார். சீடரும் தான் போய்க் கொண்டிருந்த நோக்கத்தைச் சொன்னார். அந்தக் குரு மீது இந்த யோகிக்கு ஏற்கனவே பொறாமை. அதனால் அந்தச் சீடரைப் பார்த்து, உன்னோட குருவுக்கு எதுவுமே தெரியல. அவரு ஒரு முட்டாள். நீ அவரைவிட பெரிய முட்டாள். உன்னோட குருவால ஏதாவது அற்புதம் செய்து காட்ட முடியுமா? என்னைப் போல் அவர் தண்ணி மேல நடக்க முடியுமா? இல்லே, பூமியிலேதான் புதைஞ்சி கிடக்க முடியுமா? அவராலே எதுவுமே முடியாது. அப்படியிருக்க, அந்தக் குருவுக்கிட்ட போய் ஏன் நேரத்தை வீணாக்கிற, வந்த வழியைப் பார்த்துத் திரும்பிப் போ.. அப்படின்னு பெருமையாகச் சொன்னாராம் யோகி. அதற்கு அந்தச் சீடர், நான் ஏன் அவரைக் குருவாக ஏற்று வணங்குகிறேன் என்றால், அவர் எப்போதுமே கோபப்படமாட்டார். பிறரைக் குறை சொல்லமாட்டார். இவற்றைத்தான் அற்புதங்களில் எல்லாம் பெரிய அற்புதம் என்று நான் நினைக்கிறேன் என்றார். இதைக் கேட்ட யோகி, பதில் எதுவும் பேசாமல் தலையைத் தொங்கவிட்டுக்கொண்டு போய்விட்டாராம்.

ஆம். எது அற்புதம்? நீரின்மீது நடப்பதா அல்லது புறங்கூறாமல் வாழ்வதா?

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.