2015-10-20 16:06:00

பூர்வீக இன மக்களின் மரபு ஞானம் கவனிக்கப்பட வேண்டும்


அக்.20,2015. ஐ.நா.வின் 2030ம் ஆண்டின் புதிய வளர்ச்சித்திட்ட இலக்குகள் முழுமையாக அமல்படுத்தப்படுவதில் நாம் வெற்றி காண வேண்டுமெனில், நம்முடன் வாழும் அனைவரின் நல்வாழ்வை மேம்படுத்துவதில் நமக்கிருக்கும் பொறுப்புணர்வை உணர வேண்டும் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஐ.நா.நிறுவனத்தின் எழுபதாவது பொது அமர்வில், பூர்வீக இனத்தவர் குறித்த கலந்துரையாடலில் உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பெர்னதித்தோ அவ்சா அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

பூர்வீக இன மக்களின் மனித உரிமைகள், தனித்துவம், கலாச்சாரம், பாரம்பரியம் போன்றவற்றைப் பாதுகாத்து ஊக்குவித்தால் மட்டும் போதாது, அம்மக்களின் பாரம்பரிய ஞானம் மற்றும் அனுபவத்தையும் கவனத்தில் கொள்வது முக்கியம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது சுற்றுச்சூழல் திருமடலில் கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டினார் பேராயர் அவ்சா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.