2015-10-20 16:24:00

நீல நிறத்தில் ஐ.நா.வின் 70ம் ஆண்டு நிறைவு நிகழ்வு


அக்.20,2015. அக்டோபர் 24, வருகிற சனிக்கிழமையன்று, ஐக்கிய நாடுகள் நிறுவனம் தனது எழுபதாவது ஆண்டு நிறைவை சிறப்பிக்கவுள்ளவேளை, அந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, நினைவுச் சின்னங்கள், கட்டடங்கள், அருங்காட்சியகங்கள், பாலங்கள் மற்றும் பிற முக்கிய இடங்கள் என, ஏறக்குறைய அறுபது நாடுகளில் 200 இடங்களில் நீல நிறத்தில் ஒளியேற்றப்படும் என்று ஐ.நா. அறிவித்துள்ளது.

ஐ.நா.வின் பொதுத் தகவல் துறையின் முயற்சியினால் எடுக்கப்பட்டுள்ள இத்தீர்மானத்திற்கு அரசுகளும், நகரங்களும், நகர மேயர்களும், உள்ளூர் தகவல் மையங்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுள்ளது ஐ.நா. நிறுவனம்.

பிரேசிலின் Rio de Janeiro விலுள்ள மிகப்பெரிய கிறிஸ்து மீட்பர் திருவுருவம், ஆஸ்திரேலியாவின் சிட்னி Opera House, எகிப்தின்  Gizaவிலுள்ள பெரிய பிரமிடுகள், நியுயார்க்கிலுள்ள Empire State கட்டடம், இரஷ்யாவின் Hermitage அருங்காட்சியகம், ஜோர்டனின் Petra தொன்மை நகரம், இத்தாலியின் பைசா நகர சாய்ந்த கோபுரம், தென்னாப்ரிக்காவின் Table Mountain, ஜப்பானின் SkyTree Tower, இஸ்பெயினின் Alhambra, பிரிட்டனின் Edinburgh அரண்மனை, Westminster Hall போன்றவற்றில் நீலநிறத்தில் ஒளியேற்றப்படும்.

ஆண்டுதோறும் அக்டோபர் 24ம் தேதி ஐ.நா. தினம் சிறப்பிக்கப்படுகின்றது. இந்நிறுவனம், 1945ம் ஆண்டு நிறுவப்பட்டது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.